breaking news

*தற்பொழுது ; தூத்துக்குடி மாவட்டம் ; சாத்தான்குளத்தில் மொபைல் கடை நடத்தி வந்தவர்.பென்னிஸ் ( 31 ) மற்றும் அவரது தந்தை ஜெயராஜ். இருவரும் கடந்த 20 - ம் தேதி அரசு அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக இரவில் கடை திறந்து வைத்ததாக கூறி போலீசார் வாக்குவாதம் செய்துள்ளனர். இந்நிலையில் வாக்குவாதம் முற்றியதால் காவல்நிலையத்தில் வைத்து தாக்கியதில் பென்னிஸ் மற்றும் தந்தை ஜெயராஜ் ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து விட்டனர். சாத்தான்குளம் காவல்நிலையத்தை சேர்ந்த காவல்துறை ஆய்வாளர்.அருள்கணேஷ்,  உதவி ஆய்வாளர்.பாலகிருஷ்ணன் மற்றும் தலைமைக்காவலர்  ஆகியோர் தாக்கியதில்தான் இருவரும் உயிரிழந்துள்ளனர் என பலியான பென்னிக்ஸ் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தாக்கிய காவல்துறையினர் மீது மாவட்ட நிர்வாகமும்,  தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாத்தான்குளம் பகுதி கடை வியாபாரிகள் தற்பொழுது கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் உதவிஆய்வாளர்.பாலகிருஷ்ணன் கடந்த சிலவருடங்களுக்கு முன்பு திசையன்விளை காவல்நிலையத்தில் பணிபுரிந்த காலத்தி ல் வழக்குகள் அதிகமாக பதிவாகத வகையில் மிகவும் திறம்பட செயல்பட்டவர்  ??? என்பது குறிப்பிடத்தக்கது*

Comments