கண்ணகியின் அண்ணனுக்கு சாகும்வரை தூக்கு தண்டனை.
தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை.
12 பேருக்கு ஆயுள் தண்டனை. கண்ணகி முருகேசன் படுகொலைக்கு நீதி கிடைத்தது.
வன்னியர் பெண் கண்ணகியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டதற்காக கண்ணகியையும் அவர் கணவர் தலித் சமூகத்தச் சேர்ந்த முருகேசனையும் துள்ளத் துடிக்க படுகொலை செய்த கொலையாளிகள் மற்றும் துணைநின்ற காவலர்களுக்கு இன்று தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு..
A2 கண்ணகியை படுகொலை செய்த அவரின் அண்ணன் மருதுபாண்டிக்கு #தூக்கு தண்டனை
A1-A15 (குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை (இதில் A4 & A9 விடுதலை செய்யப்பட்டனர்)
ஆயுள் தண்டனைப் பெற்ற A14 தமிழ்மாறன் அப்போது காவல் உதவி ஆய்வாளராக இருந்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்தவன், தற்போது காவல் உதவி கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவன். மற்றும் A15 செல்லமுத்து காவல் உதவி ஆய்வாளராக இருந்து குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்தவன், தற்போது காவல் ஆய்வாளராக இருக்கிறான். இவர்கள் இருவரும் படுகொலை குற்றவாளிகள் என தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை பெற்றுள்ளனர்.
எனவே குற்றவாளிகளில் 13 பேரும் தண்டனைப் பெற்றுள்ளனர். ஒருவன் உயிர் துறக்கிறான்., மற்றவர்கள் வாழ்க்கையைத் துறக்கிறார்கள்.
A4 & A9 முருகேசனின் சித்தப்பா ஐயாசாமி மற்றும் குணசேகரன் ஆகியோர் மீது பொய்யாக வழக்கு சோடிக்கப்பட்டதால் விடுதலை.
துணிச்சலோடு தீர்ப்பினை வழங்கிய உத்தமராசா ஏற்கெனவே சங்கராச்சாரியாரை சிறைக்கு அனுப்பியவர்.
பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு நீதி கிடைத்துள்ளது. வழக்கிற்கு உழைத்த அத்தனை வழக்கறிஞர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியும்.. பாராட்டுக்களும்.
கௌதம சன்னா
Comments
Post a Comment