- Get link
- X
- Other Apps
இவர்தான் நிலவிற்கு செல்ல போகும் அந்த நபர்..
அதிரடியாக அறிவித்தது ஸ்பேஸ் எக்ஸ்
நிறுவனம்!
நியூயார்க்: ஜப்பானை சேர்ந்த யுசாகா மேசாவா என்ற கோடீஸ்வரரை நிலவிற்கு அழைத்து செல்ல இருப்பதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தற்போது உலக வரலாற்றில் மிகப்பெரிய அடியை எடுத்து வைத்துள்ளது. நிலவிற்கு மனிதனை அழைத்து செல்லும் திட்டத்திற்கான முறையான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. ஒரு தனியார் நிறுவனம், ஒருவரிடம் பணம் வாங்கி, அவரை நிலவிற்கு அழைத்து செல்வது இதுவே முதல்முறை.
இன்று அதிகாலை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைமையகத்தில் நடந்த விழாவில் இது குறித்த அறிவிப்பு வெளியானது. நிலவிற்கு செல்ல போகும் ஜப்பானை சேர்ந்த யுசாகு மேசாவா உலகம் முழுக்க வைரலாகி உள்ளார்.
நிலவிற்கு செல்கிறார்கள்
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 2017ல் இருந்தே, நிலவிற்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டு வருகிறது. அவர்களின் கணக்குப்படி இந்த வருடம் மனிதர்களை அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் பல்வேறு காலதாமதம் காரணமாக இன்று வரை மனிதர்களை அனுப்பவில்லை. ஆனால் தற்போது ''பிக் பல்கான் ஹெவி'' ராக்கெட் மூலம் மனிதர் ஒருவரை நிலவிற்கு அனுப்ப உள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இன்று அதிகாலை முறையான அறிவிப்பை வெளியிட்டது.
அறிவிப்பை வெளியிட்டார்
இன்று அதிகாலை 6.10 மணிக்கு அந்த விழா தொடங்கியது. சரியாக 6.35 இருக்கும் போது எலோன் மஸ்க் அந்த பெயரை வாசித்தார். பலருக்கும் அந்த பெயர் புரியவில்லை. ஒல்லியான தேகத்தில், எளிமையான உடையுடன் அந்த மேடைக்கு வந்தார் யுசாகு மேசாவா. இவர்தான் நிலவிற்கு ஸ்பேஸ் எக்ஸ் அனுப்ப போகும் அந்த நபர் என்றார் எலோன் மஸ்க். அதவாது உலகிலேயே முதல்முறையாக காசு கொடுத்து நிலவிற்கு செல்ல போகும் அந்த நபர் இவர்தான்.
ஜப்பான்காரர்
யுசாகா மேசாவா ஜப்பானை சேர்ந்தவர். ஜப்பானில் உள்ள மிகப்பெரிய 17 கோடீஸ்வரர்களின் இவரும் ஒருவர். இந்தியாவில் உள்ள பிளிப்கார்ட் போன்ற ''சோசோடவுன்'' என்ற ஆன்லைன் ரீடெய்ல் கடை நிறுவனத்தை நடத்தி வருகிறார் இவர். ஜப்பானில் இதுதான் மிகப்பெரியஅண்ணலின் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ஆகும். அதேபோல் பல்வேறு பவுண்டேஷன், கலை பொருள் சேமிப்பு மையம் ஆகியவற்றை நடத்தி வருகிறார் யுசாகா மேசாவா
எப்போது செல்கிறார்கள்
ஆனால் இவர் நிலவிற்கு செல்லும் இந்த திட்டத்தில் சிறிய மாற்றம் ஒன்றை செய்து இருக்கிறார்கள். அதன்படி, நிலவிற்கு இவர் இந்த வருடம் அனுப்பப்படமாட்டார். அதற்கு பதிலாக 2023ல்தான் இவர் நிலவிற்கு செல்ல இருக்கிறார். பல்கான் பிக் ஹெவி ராக்கெட் மூலம் இவர் நிலவிற்கு சென்று, நிலவில் கால் பதிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment