கலைஞர் கருணாநிதி: சாதிக்கு துரோகம் செய்யாத மாமனிதர்!"

"கலைஞர் கருணாநிதி: சாதிக்கு துரோகம் செய்யாத மாமனிதர்!"

-------------------
கலைஞர் கருணாநிதி ஒரு பன்முகத்தன்மை வாய்ந்த மாமனிதர். வெற்றிகரமான அரசியல் நாயகர். சாதி ஒழிப்பு கொள்கையை பேசினாலும் கூட, அவர் தனது சாதிக்கு பல நன்மைகளை செய்த நல்ல மனிதர் என்பது பலரும் அறியாத விடயம் ஆகும்.

அது குறித்து பார்ப்போம்.

-------------------
1. "இசை வேளாளர் சமூகத்திற்கு MBC இடஒதுக்கீடு"

தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டு முறையில், பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு (BC) பட்டியலில் உள்ள சில சமூகங்கள் பெரும்பாலான இடங்களை எடுத்துக்கொள்கின்றன. எனவே, BC பட்டியலில் வாய்ப்பை பெறமுடியாமல் இருக்கும் - மிகவும் பின் தள்ளப்பட்ட சமூகங்களை தனியாக பிரித்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) பிரிவுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் 1969 சட்டநாதன் குழு, 1982 அம்பாசங்கர் குழு ஆகியவை பரிந்துரை அளித்தன.

'BC பட்டியலில் அப்போது இருந்த 222 சாதிகளில் வெறும் 34 சாதிகள் மிக அதிகமான இடங்களை அபகரிக்கிறார்கள். எனவே, போதுமான வாய்ப்பு கிடைக்காத சாதிகளுக்கு தனியே MBC இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்' என்றது அம்பாசங்கர் குழு.

BC இடஒதுக்கீட்டில் அளவுக்கு அதிகமான இடங்களை அபகரிப்பதாக, அம்பாசங்கர் குழுவால் குற்றம் சாட்டப்பட்ட 34 சாதிகளில் 'இசை வேளாளர்' சாதியும் ஒன்றாகும். அந்த சாதியினர் தமது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட இருமடங்கு அதிக இடங்களை BC இடஒதுக்கீட்டில் எடுத்துக்கொள்வதாக குறிப்பிட்டது அப்பாசங்கர் குழு.

இந்த சூழலில், அனைத்து சாதிகளுக்கும் அவரவர் எண்ணிக்கைக்கு ஏற்ப விகிதாச்சார இடஒதுக்கீடு வேண்டும் எனக்கோரி தியாகப் போராட்டத்தை நடத்தினார் மருத்துவர் இராமதாசு அய்யா. வன்னியர் சங்கம் நடத்திய போராட்டத்தில் 21 பேர் உயிர்த்தியாகம் செய்தனர்.

BC பட்டியலில் வாய்ப்பு கிடைக்காத சாதிகளுக்கு உரிமை வேண்டும். வாய்ப்பு கிடைக்காத சாதிகளில் மிகப்பெரிய சமூகம் வன்னியர்கள் என்பதால் அவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும் என்பதுதான் வன்னியர் சங்கத்தின் கோரிக்கை.

போராட்டம் நடத்திய வன்னியர்களையும் சேர்த்து 108 சாதிகளுக்கு MBC இடஒதுக்கீடு அளிப்பதாகக் கூறிய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள், அதற்கான பட்டியலை 1989-ல் உருவாக்கும் போது அதில் தனது இசை வேளாளர் சமூகத்தையும் சேர்த்துக்கொண்டார்.

(அதாவது, ஏற்கனவே BC பட்டியலில் அளவுக்கு அதிகமாக பயனடைந்த சாதி என்று அம்பாசங்கரால் குறிப்பிடப்பட்ட சாதியை, அதைவிட அதிக சலுகைகள் அளிக்கும் விதமாக MBC பட்டியலில் சேர்த்தார் கலைஞர் கருணாநிதி).

-------------------
2. "இசை வேளாளர் சங்கத்திற்கு பலகோடி மதிப்புள்ள அரசு இடம்!"

சென்னை அடையாறு, கிரீன்வேஸ் சாலை பகுதி சென்னை மாநகரின் மிக அதிக விலை மதிப்புள்ள பகுதி ஆகும். 'முத்தமிழ்ப் பேரவை' எனும் பெயரில் செயல்பட்ட இசைவேளாளர் சங்கத்திற்கு அங்கே பலகோடி மதிப்புள்ள 6 கிரவுண்ட் அரசு நிலத்தை 2009 ஆம் ஆண்டில் வழங்கினார் கலைஞர் கருணாநிதி. இந்த இடத்திற்கு அந்த சங்கம் ஆண்டு வாடகையாக வெறும் 1000 ரூபாய் வழங்கினால் போதும் என உத்தரவிட்டார் கலைஞர். 5 கோடி மதிப்பில் அங்கு அவர்கள் கட்டிய கட்டடத்தை 2011 ஆம் ஆண்டில் கலைஞர் கருணாநிதி அவர்களே திறந்தும் வைத்தார்.

இந்த சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் இசை வேளாளர்கள் தான். அங்கு கட்டப்பட்டுள்ள திருவாவடுதுறை டி.என். ராஜரத்தினம் கலையரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள படங்கள் அனைத்திலும் இருப்பவர்கள் இசை வேளாளர்களே!

-------------------
3. "இசை வேளாளர் சமூகத்திற்கு பேருந்துகளில் சலுகை"

பொதுவாக பேருந்துகளில் காய்கறி, விவசாயப் பொருட்களை ஏற்ற விடமாட்டார்கள், அல்லது அதற்கு அதிக கட்டணம் வசூலிப்பார்கள். ஆனால், பேருந்துகளின் மூன்று இருக்கைகளை பிடிக்கும் அளவுக்கு பெரிய மேளம், நாதஸ்வரம் உள்ளிட்ட இசைக்கருவிகளை ஏற்றினால் அதற்கு கட்டணம் கிடையாது என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு சலுகையை வழங்கியவர் கலைஞர் கருணாநிதி அவர்கள்தான் என்கிற ஒரு கருத்து நிலவுகிறது (இது குறித்து விரிவான பின்னணி தெரியவில்லை). 

4. "இசை வேளாளர் சமூகத்தின் பெயரில் திருமண நிதி"

1989-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு 8-ம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களின் திருமண நிதி வழங்க முடிவு செய்தது. அதற்கு இசை வேளாளர் சமூகத்தவரான மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் என்று பெயரிடப்பட்டது.

- இவ்வாறாக, சாதி ஒழிப்பு கொள்கை கொண்ட அரசியலை முன்னெடுத்த போதிலும், தான் பிறந்த சாதிக்கு விசுவாசமாக நடந்துகொண்டவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆகும்.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் - தன்னுடைய சாதிக்கு சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர் தயங்கியது இல்லை என்பதையே மேற்கண்ட சில எடுத்துக்காட்டுகள் சுட்டிக்காட்டுகின்றன. இது வரவேற்க வேண்டிய, அனைத்து சமுதாயத்தவர்களும் பின்பற்ற வேண்டிய நல்ல குணம் ஆகும்.

-------------------
"அண்ணா - கருணாநிதி - ஸ்டாலின்"

அறிஞர் அண்ணா அவர்களின் தந்தை செங்குந்த முதலியார் சமூகத்தை சேர்ந்தவர். அவரது தாயார் இசை வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர். அவர் ஒரு கோவில் பணியாளர் என்று அவரது வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன. அறிஞர் அண்ணா தந்தையின் வீட்டில் வளரவில்லை. அவரது தாயாருடைய சகோதரி (சின்னம்மா) வீட்டில் வளர்ந்தவர் ஆகும்.

தனது தாயார் இசை வேளாளர் சமூகத்தை சேர்ந்தவராக இருந்த நிலையில், அதே சமூகத்தை சேர்ந்த கலைஞர் கருணாநிதி அவர்கள், அறிஞர் அண்ணா அவர்களின் அரசியல் வாரிசாக உருவானது எதேச்சையான ஒற்றுமை ஆகும். அதேபோன்று, கலைஞர் கருணாநிதியின் வாரிசுகள் மாற்று சமுதாயங்களில் திருமணம் செய்திருந்தாலும் - அதே இசை வேளாளர் சமுதாயத்தில் திருமணம் செய்த மு.க. ஸ்டாலின் கலைஞரின் அரசியல் வாரிசாக உருவானதும் எதேச்சையான ஒற்றுமை ஆகும்.

-------------------
படம்: 'முத்தமிழ்ப் பேரவை இசை வேளாளர் சங்க கட்டடமும், அதில் இசை வேளாளர் பிரமுகர்கள் படமும்!

Comments