அன்புத் தங்கை

👨‍👨‍👦👨‍👨‍👦👩‍👦‍👦👨‍👨‍👦👨‍👨‍👧👨‍👨‍👧👩‍👧‍👧👨‍👨‍👧👨‍👨‍👧👩‍👦‍👦👨‍👨‍👦அன்புத் தங்கை
---------------------

தங்கை,
வார்த்தைகளிலோ,
பாச மொழிகளிலோ,
அடக்கிவிட முடியாத தேவதை...!!

சின்ன சின்ன குறும்புகள் செய்து
கன்னம் கிள்ளிய போதெல்லாம்
என் வயது குறைவது
போல் உணருகிறேன்...!!!

குழந்தை போலே அவள்
இன்னும் இருப்பதால் தான் என்னவோ
என்னையும் குழந்தையாகவே
நினைக்கிறாள்...!!!

கையில் மருதாணி வைத்து
அவசரமாய் என்னிடம்
காண்பிக்க ஓடி வரும் போது,
உலக அதிசயமாய் என் தங்கை..!!

அத்தனை தவறுகள் நான் செய்தாலும்
அவள் ஒப்புக்கொண்டு
அடி வாங்கும் போதெல்லாம்
தங்கையும் தியாகி தான்...!!!

தாயிடம் கூட சில உண்மைகள்
மறைப்பதற்கு இருக்கலாம்,
தங்கையிடம் மறைப்பதற்கு
பொய்கள் கூட ஒன்றுமில்லை..!!!

நான் கேட்டதெல்லாம்
விட்டுக்கொடுத்த தங்கை
என் இதயம் விட்டு போக மறுக்கிறாள்..!!
நான் அனுப்பினால் தானே
அவளும் போக முடியும்..!!

சண்டையின் போது,
செத்து போ என்று சொல்லும் அவள் தான்,
சண்டை முடியும் முன்பே
எனக்கு உயிர் கொடுக்கிறாள்..!!

தங்கை என்பவள்,
விளையாடுவதற்கு மட்டுமல்ல
ஒருபாதி வாழ்க்கையும் அவள் தான்..!!
அவள் அருகே இல்லாத போது தான்
எல்லாமே புரியும்..!!💐🌷💐🌷

Comments