தற்சார்பு வாழ்வு மரணத்தின் பிடியில் -1 ::::::::::::::::::::::::; பனை மரம் என்கிற வறுமையிலும் வளரும் மரம் :::::::::::::::::::

தற்சார்பு வாழ்வு  மரணத்தின் பிடியில் -1 ::::::::::::::::::::::::;

பனை மரம் என்கிற வறுமையிலும் வளரும் மரம் :::::::::::::::::::

1 டன் கரும்பில் இருந்து 100 கிலோ சக்கரை உற்பதி ஆகின்றது...

1 கி சக்கரை உற்பத்தி ஆவதற்கு 22000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது...

கரும்பின்  மொலஸாஸ் டாஸ்மாக் கம்பனிக்கு போவது வேற அரசியல்.

ஆனால்,

30 லி புதிய பதநீரில் 5 கிலோ பனை வெல்லம் எடுக்கப்படுகிறது.

வருடத்திற்கு மூன்று முறைதான் பதநீர் இறக்கப்படும்.

அதாவது ,சராசரியாக 5 லிட்டரில் 1 கிலோ வெல்லம் எடுக்கப்படுகிறது.

இதற்கு எந்த வித தண்ணீர் செலவும் இல்லை.

ஒரு பனை மரமானது ஓராண்டில் 180 லிட்டர் பதநீர், 1 கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை நல்கும் வளவாய்ப்புடையது. மேலும் ஒரு பனை மரத்திலிருந்து 24 கிலோ பனை வெல்லம்,16 கிலோ பனஞ்சக்கரை, 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றைப் பெறமுடியும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், செர்மன், இத்தாலி, பெல்சியம், பிரான்சு, ஆஸதிரேலியா, சப்பான் போன்ற நாடுகளுக்கு பனைப் பொருள்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்தியாவிற்கு ஆண்டுதோறும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் அந்நியச் செலாவணி கிடைக்கிறது.

ஆனாலும், 80 விழுக்காட்டிற்கும் அதிகமான பனைத் தொழிலாளர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ்தான் வாழ்கிறார்கள்.

ஒரு பனைத் தொழிலாளர் நாள்தோறும் 10 முதல் 15 மணி நேரம் வரை மேற்கொள்ளும் வேலைக்கு 15 ரூபாய்கள் வரை சம்பாதிக்கிறார்.

ஒரு பனைத் தொழிலாளரின் குடும்ப வருமானமானது அவர் எத்தனை பனை மரங்கள் ஏறுகிறார் என்பதனையும் அவர் குடும்பத்தில் எத்தனை உழைப்பாளர்கள் இருக்கிறார்கள் என்பதனையும் பொருத்தே அமைகிறது.

பெரும்பான்மையான பனைத் தொழிலாளர்களுக்கு சொந்த மரங்களில்லை.

தமிழகத்தில் உள்ள பனையேறும் குடும்பங்களில் 67.85% குடும்பங்களுக்கு சொந்த மரங்கள் கிடையாது என ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் நீங்கலாக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் நிலக்கிழார்கள் பனை மரங்களை குத்தகைக்கு எடுத்து பதநீர் இறக்கக் குறைந்த கூலிக்கு ஆள்களை நியமித்துக்கொள்கிறார்கள்.


தமிழ்நாட்டின் தேசிய மரமாம் ஆனால் பனையேறிகளின் குடும்பமும் பனை குடும்பமும் வறுமையின் பிடியில் இன்று  :::::::::::

முதலில் பனை மரத்தை பற்றி பார்ப்பதற்கு முன் சற்று அண்டை மாநிலத்திற்கு போய் வருவோம் தமிழனே.....

அண்டை மாநிலத்தோடு ஓப்பிடு என்பது அறவே சரியான செயல் அல்ல என்றாலும், படிப்பானலும் சரி அதுதான்..பனையின் வேண்டுகோளுக்கு இனங்க.. சற்று போய் வருவோம்.... பின்பு குளிர்பானங்களையும், டாஸ்மாக்கிலும் வரிசையில் நிற்கலாம்.

பனையின் வரலாற்று கதைகளை பகிர்வதை விட ... அதனின் தற்போதைய நிலையை அறிந்து மீட்டெடுக்கும் கடமை தமிழ்குடிக்கு உண்டு என்பதை பனை எச்சரித்துள்ளது...

என்னடா எச்சரிக்கை செய்கிறது என ஆதங்கப்பட வேண்டாம்.

கேரளா மாநிலத்தின் மாநில மரம் தென்னை...
  
ஆனால், அவர்கள் அதனை 4 நபருக்கு 20 மரம் விதம் வளர்த்து வருகின்றனர்...

அவர்கள் தென்னையை வயல்வெளிகளில் வளர்ப்பது இல்லை வீட்டின் பின்புறத்தில் மட்டுமே.. 95 சதவிகிதம் வளர்த்து வருகின்றனர்.

30 சதவிகிதம் வயல்வெளிகளில் வளர்த்து வருகின்றனர்.

அவர்கள் பெரும்பாலும் அதனை , இளநீராக பறிப்பதில்லை...முற்றிய தேங்காயாக வரும் வரை காத்திருந்து எண்ணெய் உற்பத்திக்காகவே பயண்படுத்துகின்றனர் 80 சதவிகிதம்.

பிறகு , எப்படி வருமானம் என சிந்திக்க வேண்டாம்.. ஓரு மரத்தில் “நீரா பாணம்” மூலமே  மாதம் 2000 வரை ஓரு மரத்தில் இருந்து கிடைத்து விடுகிறது.. தென்னை மரக்கள் இறக்கும் தொழிலாளிக்கு.

இதனை ,  கேரளமும், கன்னடமும் அரசாங்கமே அங்கிகாரம்  கொடுத்து ஊக்கமளித்து வருகிறது.

இந்தியாவின் 50 சதவிகிதம் தென்னை உற்பத்தியை கேரளமே கொண்டுள்ளது...

தண்ணீர் இல்லை தென்னை எல்லாம் காயுது... என்று தமிழக விவசாயிகள் கதறல்...

பணம் காய்க்கும் மரமான நம் பனைமரத்தை விடுத்து தென்னைக்கு மாறியதால் வந்தப்பிரச்சனை சொட்டுநீர் வரை சென்று உள்ளோம்...

2016-2017 ஆண்டின் அறிக்கை படி கேரளம் 7.70 லகரம் ஹெக்டர் நிலப்பரப்பில் தென்னை உற்பத்தி செய்து உள்ளது..

அதில் இருந்து 7464.25 மில்லியன் தேங்காய் உற்பத்தி செய்துள்ளது..

தமிழ்நாடு 6171.07 மில்லியன் தேங்காய்கள் உற்பத்தி செய்துள்ளது,

கர்னாடக 5128.95 மில்லியன் தேங்காய் உற்பத்தி செய்துள்ளது....

2015 ஆண்டு கேரளம் 4896.91 மில்லியன் உற்பத்தி மட்டுமே செய்து பின்தங்கிய கேரளம்..

அடுத்த ஆண்டே மாநில மரத்தின் மானத்தை காப்பாற்றி.. உற்பத்தியை அதிகரித்து முதலிடத்தை பிடித்தது.

இப்படி கடுமையாக கேரளம் போராடி ஹெக்டருக்கு 12500 தேங்காய்கள் உற்பத்தி செய்து முன்னேறி வருகிறது..

போட்டியாக ஆந்திராவும் ஹெக்டருக்கு 13500 என முன்னே உள்ளது.. இப்படி போட்டி போட்டு இருவரும் உற்பத்தியை பெருக்கி வருகின்றனர்.

தென்னை சாகுபடியில் 1980 வரை  14 சதவிகிதமே இருந்தே தமிழ்நாடு, தற்போது மற்ற மாநிலங்களோடு போட்டி போட்டு வருகிறது பெருமைக்கூறிய விடயம் எனினும்,

1 தென்னை மரம் 100 லிட்டர் தண்ணீரை எடுத்துக்கொள்கிறது...நாள் 1 க்கு...10 நாளுக்கு 1 முறை.

இப்படி நிலத்தடி நீரை நம்பியுள்ள தமிழகம், தண்ணீரை நம்பியே உள்ள தென்னைப்பன்னையை நாம் முன்னெடுத்து விட்டு , பாலைவனத்தில் கூட வளரும் பனையை கைவிட்டது ஏன்?

உடனடி பலன் அல்ல என்பதால் என்ற பதிலே வரும்.

பார்ப்போம் யார் அதிகம் பலன் தருகிறார்கள் என்று தொடர்க...!!!

அரசின் விசப்புரட்சியில் பனை புரட்சி எங்கே போனது-  பகுதி-2  ல்

- sridhar pichaikaran

பனையேறிகள் பனையேறுவர், வாழ்வில் ஏறுவார்களா??????????

Comments