மெர்சல் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் 62 வது படத்தை இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்குவது தெரிந்த சமாச்சாரம்.
படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்துவிட்டன. அடுத்து நடிக்கும் நடிகர்கள் தேர்வில் மும்முரமாக உள்ளார் முருகதாஸ்
விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருப்பதாக ஒரு பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது.
நயன்தாராவுக்கும் முருகதாஸுக்கும் இடையே ஒரு பனிப்போர் உள்ளதாக ரொம்ப நாளாக கூறி வருகிறார்கள். காரணம் கஜினி படத்தில் தன்னை வெறும் ஐட்டம் டான்சராகக் காட்டி டம்மியாக்கிவிட்டார் என்பதுதானாம்.
கஜினிக்குப் பிறகு முருகதாஸின் எந்தப் படத்திலும் நயன்தாரா நடிக்கவில்லை.
ஆனால் நயன்தாராவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான அறம் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நேரத்தில் அவரை விஜய்க்கு ஜோடியாக்கினால் படத்துக்கு கூடுதல் பப்ளிசிட்டி கிடைக்கும் என்பது தயாரிப்பாளர்களின் கணக்கு.
சினிமாதானே... எதுவும் நடக்கலாம்
Comments
Post a Comment