பிச்சுவா கத்தி
இதில், ‘சுந்தரபாண்டியன்,’ ‘ரம்மி’ ஆகிய படங்களில் நடித்த இனிகோ பிரபாகரன், மற்றும் செங்குட்டுவன், ஸ்ரீபிரியங்கா, அனுஷா, யோகி பாபு, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பாலசரவணன், ரமேஷ் திலக், காளி வெங்கட், ஆர்.என்.ஆர்.மனோகர், ‘பருத்தி வீரன்’ சுஜாதா ஆகியோர் நடித்துள்ளனர்.
யுகபாரதி பாடல்களை எழுத, தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, சுந்தர பாண்டியன், மஞ்சப்பை ஆகிய படங்களுக்கு இசையமைத்த என்.ஆர்.ரகுநந்தன், இந்த படத்துக்கு இசையமைத்து இருக்கிறார். ஸ்ரீஅண்ணாமலையார் மூவீஸ் சார்பில் சி.மாதையன் தயாரித்துள்ளார்.
டைரக்டர் சுந்தர் சி.யிடம் உதவி டைரக்டராக இருந்த ஐயப்பன், ‘பிச்சுவா கத்தி’ என்ற படத்தின் மூலம் டைரக்டர் ஆகியிருக்கிறார்.

ஒரு வழக்கில் சிக்கிய 3 கிராமத்து இளைஞர்கள் பணம் சம்பாதிப்பதற்காக தவறான பாதைக்கு செல்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை என்ன ஆகிறது? என்பதே கதை. சென்னை மற்றும் கும்பகோணத்தில் படம் வளர்ந்து இருக்கிறது.
Comments
Post a Comment