எந்திரன் படத்தின் 100 நாள் வசூலை வெறும் 9 நாட்களில் முறியடித்தது பாகுபலி

பாகுபலி வெளிவந்து இன்றோடு 10 தினங்கள் ஆகின்றன, 9 வது நாளான நேற்றுடன் படம் இதுவரை சுமார் 300 கோடியை வசூலித்து புதிய வரலாற்றைப் படைத்து இருக்கிறது, பாகுபலி வெளியான நாள் முதலே பல்வேறு சாதனைகளைப் புரிந்து வருகிறது. வெளியான முதல் நாளே 50 கோடியை வசூலித்தது, 2 நாட்களில் 100 கோடியைத் தாண்டியது மற்றும் மிக வேகமாக 200 கோடியை வசூலித்தது, போன்ற சாதனைகளில் தற்போது எந்திரன் படத்தின் வசூலை முறியடித்ததும் இணைந்துள்ளது. படம் கண்டிப்பாக 500 கோடியைத் தொடும் என்று டோலிவுட் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன, 500 கோடியை படம் வசூலிக்கும் பட்சத்தில் ஒரு புதிய வரலாறையே பாகுபலி உருவாக்கக் கூடும். பாகுபலி 500 கோடியைத் தொடுமா? என்று பார்க்கலாம்
Comments
Post a Comment